டயகம கிழக்கு தோட்டத்தொழிலாளர் தொடர் குடியிருப்பு தீக்கிரை 10 குடும்பங்களைச் சேரந்த 37 பேர் பாதிப்பு.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

யகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தில் உள்ள இலக்கம் 26 கொண்ட தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்று இன்று (20) காலை 8.00 மணியளவில் தீடீர்ரென தீப்பற்றிக்கொண்டத்தில் அக்குடியிருப்பில் இருந்த ஆறு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இந்த தீ விபத்தில் 20 ஆண்கள்,17 பெண்கள் 09 சிறுவர்கள் உட்பட மொத்தம் 37 பேர் பாதிக்கப்பட்டள்ளனர்.
குறித்த தீயினை இளைஞர்கள் பிரதேச வாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இத்தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்படாத போதிலும் இங்கு வாழ்ந்த 10 குடும்பங்களின் உடு துனிகள்,தங்க ஆபரணங்கள்,அத்தியவசிய ஆவனகள்,தளபாடஙகள்,வீட்டு உபகரணங்கள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அத்தோட்டத்தில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபை இணைந்து நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகக்ரபத்தனை பிரதேசசபையின் தலைவர் கதிர்ச்செல்வன் தெரிவித்தார.
இந்த தீ வித்து தொடர்பாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல் மற்றும் பிரதேசசபை தலைவர் கதிர்ச்செல்வன் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவிரைவில் வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இத்தீபத்து காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாகவும்,தீவிபத்துக்கான காரணத்தினை கண்டறிவதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -