ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியும் ஒப்பந்தத்தில் UK பிரதமர் போரிஸ் ஜோன்சன் கையெழுத்திட்டார்.



ஒலுவில் எம்.ஜே.எம்.பாரிஸ்-ரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய ராஜ்ஜியம் ( UK ) விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை ஜக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய ராஜ்ஜியம் விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில் ஜக்கிய ராஜ்ஜியம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

லண்டனில் டவுனிங் வீதியில் அமைந்துள்ள ஜக்கிய ராஜ்ஜிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜக்கிய ராஜ்ஜிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் அவர் கையெழுத்திட்டார்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸிலிருந்து ஜக்கிய ராஜ்ஜிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கொண்டு வந்தனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை ஜக்கிய ராஜ்ஜிய வரலாற்றில் புதிய அத்தியாயம் என ஜக்கிய ராஜ்ஜிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வர்ணித்தார்.

இந்த ஒப்பந்தம், மீண்டும் பிரஸல்ஸ் எடுத்துச்செல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 31ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறிவிடும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -