TVS iQube என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைன் மிகவும் வசீகரமாகவே இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் பார்ப்பதற்கு கச்சிதமாகவும், வலுவானதாக தெரிவதுடன், மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. முகப்பில் LED பகல்நேர விளக்குகள், அப்ரான் பகுதியில் LED ஹெட்லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை அமைந்துள்ளன. பார்க்கவே ரொம்ப அழகாக காட்சியளிக்கிறது.
TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4kW திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 0- 40 KM வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. மணிக்கு 78 KM வேகம் வரை செல்லும்.
இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 KM தூரம் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டருக்கு வீட்டில் சார்ஜ் செய்ய சார்ஜரும் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டரில் Eco மற்றும் Power என்ற இரண்டு ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. Eco மோடில் வைத்து இயக்கும்போது அதிகபட்ச பயண தூரத்தை வழங்கும். Power மோடில் செயல்திறன் சற்றே அதிகரிக்கும் என்பதால், பேட்டரி ரேஞ்ச் குறையும்.
புதிய TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் LED ஹெட்லைட், LED பகல்நேர விளக்குகள், டெயில் லைட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதி மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இந்த ஸ்கூட்டரில் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஸ்கூட்டர் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்தி வைக்க முடியும். இது களவு போவதிலிருந்து தவிர்க்க உதவும். நேவிகேஷன் வசதி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுதல் முறை குறித்த தகவல்கள், அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதியையும் பெற்றிருக்கிறது.
1ம் கட்டமாக இந்தியாவின் பெங்களூர் நகரில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ₹115,000 ரூபாவில் ( சுமார் 3 லட்சம் ரூபா ) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் 27ம் திகதி முதல் இந்தியாவின் பெங்களூர் நகரில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். மாதத்திற்கு 1,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளதாக TVS மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.