எச்.எம்.எம்.பர்ஸான்-
விசித்திரமான முறையில் வழமைக்கு மாற்றமாக வாழை மரம் ஒன்று காய்த்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட மஜ்மாநகர் வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள 31 ஆம் இலக்க வீட்டு வளவில் உள்ள வாழை மரம் ஒன்றே இவ்வாறு அதிசயமான முறையில் காய்த்துள்ளது.
இரு வாரத்துக்குமுன் வாழை மரத்தை பார்க்கும் போது சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்தது அது தற்போது பெரிய வடிவில் ஒரு வாழைக்காயுடன் காய்த்துள்ளது என்று வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
கோழிக்கூடு வாழை வகை கொண்ட இவ் அதிசய மரத்தைப் பார்வையிட குறித்த வீட்டை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.