கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால்(Kalmunai Undergraduate Association - KUA) கா.பொ.த.சாதாரண தரம்-2019 (O/L) எழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான உயர்தர கற்கைகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின்
விரிவுரையாளரான எச்.எம்.நிஜாம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் உயர்தரத்தில் தங்களது அடைவு மட்டங்களை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது மற்றும் பல்கலைக்கழக நுழைவை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது எனும் தொணிப்பொருளில் உரையாற்றினார்,
மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்
அரபு மொழிகள் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடத்தின்
விரிவுரையாளரான
எப்.எச்.ஷிப்லி அஹமட் நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்டு உயர்தரத்தில் காணப்படும் பல்வேறு துறைகள் சம்மந்தமாகவும் அந்த துறைகளை தெரிவுசெய்வதால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு எந்த எந்த துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் தொணிப்பொருளிளும், அத்துடன்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்
பொறியியல் பீடத்தின் மற்றுமொரு விரிவுரையாளரான ரிசாத் ஆதம்லெவ்வை அவர்கள் இதில் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களின் வாழ்வியலில் வெற்றிக்காக வழிமுறைகள் பற்றி உரையாற்றினர்.
இந்த நிகழ்விற்கு கல்முனை பிராந்தியத்தைச்சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்பட சுமார் 120 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.