சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி எழுதிய 'பனூ உமையா' ஆட்சிக் காலம் தொடர்பிலான வரலாற்று நூலின் வெளியீட்டு விழா நாளை மறுதினம் வியாழக்கிழமை (09) பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பு-10, டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்ட்து விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருக்கிறார்.
அத்துடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் கௌரவ அதிதியாகவும் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.