ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் ரயில் கடவைக்கு அருகாமையில் உள்ள மஞசள் கோட்டுப்பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கரவண்டிnயொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணஞ் செய்த நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் கடும் காயங்களுக்கு உள்ளான, நபர் ஒருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஏனைய மூன்று பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
இச்சம்பவம் இன்று (30) திகதி மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியிலிருந்து கினிகத்தேனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றும் வெலிஓயா பகுதியிலிருந்து தரவளை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்து இடது பக்கமாக வந்த மோட்டார் சைக்கில் முந்திச் செல்ல முற்பட்ட போது அதற்கு வழிவிடுவதற்காக காரின் சாரதி வலது பக்கம் காரினை செலுத்திய போது எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதுண்டதாக சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.