வானொலிக் குரல் ஜிப்ரியின் மறைவை ஈடுசெய்ய முடியாது - பைஸர் முஸ்தபா அனுதாபம்


மினுவாங்கொடை நிருபர்-

சிரேஷ்ட வானொலிக் குரல் ஜிப்ரியின் மறைவு, தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அனுதாபச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான அல்.ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 60 ஆவது அகவையில் காலமான செய்தியைக் கேட்டு கவலையடைந்தேன்.
காலஞ்சென்ற மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, பேரும் புகழும் பெற்ற வானொளி அறிவிப்பாளர் மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பாடசாலைகளில் திறமைமிக்க அதிபராகவும் பணியாற்றி, மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உறுதுணையாகவும் இருந்துள்ளார். இது, இவரது ஊடகத்துறைக்கும் கல்வித்தேவைக்கும் மிகச்சிறந்த எடுத்துக் காட்டாகும் என நான் கருதுகின்றேன்.
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும், இறைவனின் நியதியை எப்போதோ ஒருநாள் ஏற்றுக்கொண்டு, மரணித்தாக வேண்டும் என்ற இறை வசனத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன். வயது வித்தியாசமின்றி எல்லோருடனும் சகஜாமாக மனம் விட்டுப் பழகும் மர்ஹூம் ஜிப்ரி, பலபேருக்கு நிறையவே அவ்வப்போது தேவையான விடயங்களைக் கற்றுக் கொடுத்திருப்பது, அவரது சிறந்த குணநல இயல்புகளை எடுத்துக்காட்டுகின்றது.
மர்ஹூம் ஜிப்ரியின் மறைவு, தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை வழங்குவானாக. அத்துடன், அவர்களுக்கும் இறைவன் மேலான சுவனத்தை வழங்க, நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -