தினமும் ஆபத்தை எதிர்நோக்கி பயணிக்கும் வீதியை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவட்டவான் வம்மியடி பகுதியில் அமைந்துள்ள பொத்தானையை நோக்கிப் பயணிக்கும் வீதி முற்றாக சேதமடைந்து பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. அத்தோடு அவசர தேவை நிமித்தம் பயணிக்கும் மக்கள் அச்சத்துடன் அவ் வீதியால் செல்கின்றனர். வீதி நீரோடைக்கு அருகில் உள்ளதால் பயணிக்கும் போது நீரோடைக்குள் சறுக்கி விழும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதி அண்மையில் எற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ளதால் அவ் வீதியால் பயணம் செய்யும் விவசாயிகள், அப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே இதனைக் கருத்திற் கொண்டு குறித்த வீதியை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.