கொரோனா வைரஸ் பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சைனா விஞ்ஞானிகள் கூறியதையடுத்து மக்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து மரக்கறி சந்தைகளை சைனர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.
சைனாவில் சமீபநாட்களாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு 56 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வுஹான் நகரில், இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடுமையான சளி, தொடர் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை நோயின் முதல் அறிகுறி என கூறப்படுகிறது.
தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் பறிக்கிறது. இதனால், சைனர்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க சைனாவில் விரைவாக புதிய வைத்தியசாலையொன்றை அமைக்க சைனா அரசாங்கம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும், புதிதாக அமையவுள்ள இந்த வைத்தியசாலை 10 நாளுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்படவுள்ளது.
இதனிடையே, 13 நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த போது பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, சைனர்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து மரக்கறி சந்தைகளை நாடத் தொடங்கியுள்ளனர். எனினும், கொரானா வைரஸ் தொடர்பான ஆய்வு முடிவுகள் எதுவும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.