மாநகரசபை உறுப்பினர் ஜௌபரின் முயற்சிக்கு உடனடி பலன்! பொலிவுறும் சாய்ந்தமருது பாலத்தடி!! பிரதேச மக்கள் மகிழ்ச்சி!!!

எம்.வை.அமீர்-
சாய்ந்தமருதின் சோகம் என்றால்போல், காண்போரை முகம்சுழிக்க வைக்கும் விதத்தில் காணப்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி தோணா பாலத்தை அண்மித்த பகுதிகள் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் தொழிலதிபருமான எம்.வை.எம். ஜௌபரின் அயராத முயச்சியால் மக்களினதும் கல்முனை மாநகரசபையினதும் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டு பொலிவுற்றுக் காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் குவியும் வேண்டப்படாத கழிவுகள், அதானால் ஏற்பட்டு வந்த சுகாதார மற்றும் சமூக சீர்கேடுகள் பற்றி பொதுமக்களும் ஊடகங்களும் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில் சாய்ந்தமருது 20ஆம் வட்டார உறுப்பினர் எம்.வை.எம். ஜௌபர் அதிரடியாக எடுத்த பல்வேறு முயற்சியின் பயனான சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி தோணா பாலத்தை அண்மித்த பகுதிகள் தற்போது பொலிவுற்றுக் காணப்படுகின்றது.

குப்பைமேடாகக் காணப்பட்ட குறித்த பிரதேசம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு அருகில் உள்ள பாலத்துக்கு நிறம் பூசியுள்ளதுடன் மக்கள் அமர்ந்து, பொழுதைக் கழிக்கக்கூடிய விதத்தில் மணல் இட்டு இருக்கைகளும் இடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கல்முனை மாநகரசபை உறுப்பினரும் தொழிலதிபருமான எம்.வை.எம். ஜௌபர் தெரிவித்தார்.

தினமும் காலை 6.30 முதல் 7.30 மணி வரையான கால எல்லைக்குள் மாநகரசபையின் கழிவகற்றும் வாகனம் குறித்த பிரதேசத்தில் தரித்திருக்கும் என்றும் அந்த கால எல்லைக்குள் தங்களது வீடுகளில் சேரும் கழிவுகளை விரைவாகக் கொண்டுவந்து வாகனத்தில் இடுமாறும் இவ்வாறான ஒழுக்க நெறியை தயவுசெய்து கடைப்பிடிக்குமாறும் அன்புடன் பிரதேச வாசிகளைக் கேட்டுக்கொள்வதாகவும் கட்டளைகளை மீறுவோருக்கு எதிராக மாநகரசபை சட்டத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும் என்றும் தெரிவித்தார்.

சுத்தப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் இரவுபகலாக கண்காணிக்கப்படுவதாகவும் சிசிரிவி கமராக்களும் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், பிரதேச மக்கள் கழிவுகளை கையாளுவதில் சரியான முறை யில் ஒழுக்கநெறிகளை கையாளுவார்களாக இருந்தால் இவைகள் அனைத்தும் தேவையற்றது என்றும் தெரிவித்தார்.

பிரதேசம் சுத்தமாக்கப்படத்தைத் தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர் எம்.வை.எம். ஜௌபர் அவர்களது முயற்சியைப் பாராட்டும் அதேவேளை குறித்த பணிக்கு ஒத்துழைக்க அநேகர் முன்வந்துள்ளனர். இதேவேளை மாநகரசபை உறுப்பினரது முயற்சிக்கு ஒத்துழைத்த கல்முனை மாநகரசபை முதல்வர் சிரேஷ்ட்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ,ஆணையாளர் எம்.சி.அன்சார் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு பொறுப்பாக இருக்கும் யூ.கே.காலித்தீன் ஆகியோரும் மக்களின் நன்றிக்கு உரியவர்களாகியுள்ளனர்.

சாய்ந்தமருதில் அண்மைக்காலமாக பல்வேறு புரட்சிகளை மேற்கொண்டு வரும் இயற்கையை நேசிக்கும் மன்றமும் மிக நீண்டகால சீர்கேடாக காணப்பட்ட குறித்த பிரதேசத்தை அழகுபடுத்துவதில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வேண்டி நிற்கின்றனர். 


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -