1989ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மூன்று ஊர்களுக்குமான இரண்டு வருட சுழற்சி முறையில் முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைமையுடன் எழுதப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான ஒப்பந்தத்துடன் ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா என மும்முனை பிரதேசங்களில் இருந்து களமிறக்கப்பட்ட ஹிஸ்புல்லா, மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதார், பசீர் ஆகியோர்களில் ஹிஸ்புல்லா அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற பாராளுமன்ற கதிரையிலும் உட்கார்ந்தார்.
இரண்டு வருடங்களில் நிறைவில் எழுதப்படாத ஒப்பந்தத்தின் படி சுழற்சி முறையில் இராஜினாமாச்செய்து கல்குடாவிற்கு பாறாளுமன்ற பிரதி நிதித்துவ வாய்ப்பினை ஹிஸ்புல்லாஹ் கொடுக்க மறுத்ததினை அடுத்து முஸ்லிம் காங்கிரசுடனும், தலைமை மர்ஹும் அஸ்ரபுடனும் முரண்பட்ட நிலையில் தொடர்ந்து வந்த 1994ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் கல்குடாவை பிரதி நிதித்துவப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதர் முஸ்லிம் காங்கிரசினை எதிர்த்து ஒரு பொழுதும் கல்குடாவில் தனித்து நின்று வெற்றியடைய முடியாது என்ற நிலையை உறுதிப்படுத்தும் வகையில் படுதோல்வியடைந்ததுடன் மீண்டும் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்தார்.
இதனால் தொடர்ந்தேர்ச்சியாக 1989ம் ஆண்டு தொடக்கம் 1999ம் ஆண்டு வரை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற பிரதி நித்துவம் இல்லாமல் கைவிடப்பட்ட கல்குடா மக்கள் விடுதலை புலிகளின் கெடுபிடிகள் என ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் அரசியல் அதிகாரம் இல்லாத தலைமைகள் இன்றி அநாதையாக்கப்பட்ட மக்களாகவும், கேட்பார் பாற்பார் அற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சமூகமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறான கல்குடா மக்களின் அவலகரமான நிலையை கொழும்பில் இருந்தவாறு சமூக உணர்வுடன் சிந்திக்க தொடங்கிய அமீர் அலி எனும் இளைஞன் எப்படியாவது மீண்டும் முஸ்லிம் காங்கிரசிற்குள் மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதரை உட்புகுத்தி கல்குடாவில் வேலி கட்டிய அரசியல் மூலம் பாராளுமன்ற பிரதி நித்துவத்தினை வென்றெடுக்க வேண்டும் என்ற சரியான திட்டமிடலுடன் திரை மறைவில் கல்குடா இளைஞர்கள், புத்திஜீவிகள், அரசியல் செயற்பாட்டளர்கள், அன்றைய உலமாக்களையும், சமூக சிந்தனையாளர்கள், பல்கலை கழக மாணவர்கள், வாழைச்சேனை பிரதேச போராளிகள், மொஹைதீன் அப்துர் காதரின் விசுவாசிகள் என பலதரப்பட்வர்களில் முக்கியமானவர்களை அடையாளம் கண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கத்தொடங்கினார்.
நீண்ட பயணத்தின் முடிவில் பெரும் தலைவர் அஸ்ரப்பினை சமாதானப்படுத்தி, அவரை உடன்பாட்டுக்கு கொண்டு வந்து மீண்டும் மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதரை கட்சிக்குள் உள்வாங்கி அவர் வேட்பு மனுவில் கையழுத்து வைக்கும் வரைக்கும் தனது நண்பனும், அந்த காலகட்டத்தில் ஈரோசில் இருந்து மர்ஹும் அஸ்ரப்போடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் செயற்பட்டவரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்தினை மிகப்பெரும் ஆயுதமாக அமீர் அலி பயன்படுத்திய விதமானது அவருக்கு இருந்த மிகப் பெரும் அரசியல் ஆளுமையின் உச்சத்தினையும், அரசியல் சித்தார்ந்தத்தின் சித்த விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களின் எதிர்பார்ப்பினை இவ்வாறுதான் வெல்லுவது என்பதற்கு மிகப்பெரும் உதராணமாகவும், திரைக்குப்பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகளாக இன்று வரைக்கும் இருந்து வருகின்றது.,
எவ்வாறு ஒரு சமூகத்தின் அரசியல் கட்டமைப்பினை சினிமாவில் காட்டுவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து வடிவமைத்து, அதற்கு கதை வடிவம் கொடுத்து, திறமையான நடிகர்ளினால் மக்கள் மனங்களில் பதியவைக்கப்படுமோ.! அதே போன்று முதிர்ச்சி பெற்ற ஓர் அரசியல் கலைஞ்ஞனாக அமீர் அலி கொழும்பு எனும் திரையின் பின்னால் இருந்து கொண்டு கல்குடா சமூகத்தின் அரசியல் கட்டமைப்பிற்கு தேவையான சகலதையும் தோற்கடிக்க முடியாத திட்டங்களோடு மிகச் சாதுர்யமாக இயங்கிக்கொண்டிருந்தார்.
அவ்வாறான அவருடைய தியாகத்துக்கு கிடைத்த பரிசே மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதரை மீண்டும் முஸ்லிம் காங்கிரசிற்குள் 1999ம் ஆண்டு உட்புகுத்தி பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைய வைத்த வரலாற்றினை முரண்பாட்டு அரசியலை அமீர் அலிக்கு எதிராக தகுந்த காரணங்கள் ஏதும் இன்றி ஆயுதமாக தூக்கிப்பிடித்து பூச்சாண்டி அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலும் செய்பவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்படியாவது கல்குடாவிற்கு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினையும், அதிகாரமிக்க அரசியல் தலைமையினையும் உருவாக்குவதே அமீர் அலியினுடைய அன்றையே நோக்கமாக இருந்தது. அதற்கு ஓட்டமாவடியை மையப்படுத்தி தனக்கு பெருமளவிலான வாக்கு வங்கியினை வைத்திருக்கும் மொஹைதீன் அப்துர் காதரை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக களமிறக்குவதன் மூலமே முடியும் என்ற திட்டத்தில் மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் செயற்பட்டார். அதற்காக கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கியதேசிய கட்சி என்று பிளவுபட்டிருக்கும் கல்குடா மக்களை ஒரு முகப்படுத்தி ஒரே குடையின் கீழ் செயற்பட வைத்து, கல்குடாவில் வேலி கட்டிய அரசியலினை எவ்வாறு மேற்கொள்வது என்ற திட்டமே அமீர் அலியின் மிகப்பெரும் சாதுர்யமான செயற்பாடாக காணப்பட்டது.
இவ்விடயமானது கல்குடா சமூகம் சார்ந்த தூர நோக்கு அரசியல் சிந்தனையாக இருந்தாலும்.! அமீர் அலி தனது எதிர்கால அரசியல் கனவு சம்பந்தமாகவும், தனது வாழ் நாளில் நான் கல்குடாவை பிரதி நிதித்துவப்படுத்தி பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்தே தீருவேன் என்ற இலட்சியமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் கல்குடாவில் அன்று வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும், இன்றைய இளைஞர் சமூதாயத்துக்கும் மொஹைதீன் அப்துர் காதர் வேலிகட்டிய அரசியல் மூலம் பாராளுமன்ற கதிரையில் 1999 - 2000ம் ஆண்டைய காலப்பகுதியில் முதன் முதலாக உட்காருவதற்கு அமீர் அலியினால் திரைக்குப்பின்னால் மேற்கோள்ளப்பட்ட அரசியல் செயற்பாடுகளும், நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட அன்றை கல்குடாவின் அரசியல் செயற்பாட்டாளர்களும்தான் காரணம் என்ற உண்மை தெரியாமலே இருந்து வருகின்றனர்.
அத்தோடு மொஹைதீன் அப்துர் காதரை பின் நாட்களில் அமீர் அலி எதிர்க்க தொடங்கி இன்று வரைக்கும் அவ்வாறான செயற்பாடுகளும், அமீர் அலி எதற்காக அப்துர் காதரை எதிர்த்தார் என்பதற்கான காரணங்களும் கல்குடாவின் தேர்தல் மேடைகளில் பேசும்பொருள்ளாக எவ்வாறான அரசியல் நன்மை, தீமைகளுக்காக மாற்றப்பட்டுள்ளது என்பதனை தற்போதைய இளைஞர் சமூகம் தேடி அறிந்து கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது………
பின் நாட்களில் அமீர் அலி எதற்காக மொஹைதீனை எதிர்க்க தொடங்கினார் என்ற உண்மை கதைய தொடரும