இலங்கையில் போயா தினமான வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி சந்திர கிரகணம் இடம்பெற்றுள்ளது.
வானியியலாளர்கள் கருத்துப்படி இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இதுவாகும் என்பதோடுஇ 2020 தசாப்தத்தின் முதலாவது சந்திரகிரகணகமும் இதுவாகும்.
வெள்ளிக்கிழமை இரவு 10.37 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம் 11ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 2.42 மணிக்கு முடிவடையும். இதன் உச்ச நிலை வெள்ளிக்கிழமை 12.40 மணிக்கு காணலாம். இச்சந்திரகிரகணத்தை ஓநாய் சந்திரகிரகணம் என்று நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது நிலவின் ஒளி மறைக்கப்படும் நிலையே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.
மேலும் இவ்வருடம் 03 சந்திரகிரகணங்கள் நிகழவுள்ளதோடு அவை ஜூன் 05ஆம் திகதிஇ ஜூலை 05ஆம் திகதி மற்றும் நவம்பர் 30ஆம் திகதிகளில் நிகழவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும். அதாவது பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே குறிப்பாக பூமியின் வெளிப்புற நிழல் (பெனும்ப்ரா) மட்டுமே சந்திரனில் விழுவதால் இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த சந்திர கிரகணத்தை இலங்கை ஆசியா அவுஸ்திரேலியா ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது பெனும்ப்ரல் வகை கிரகணம் என்பதால் முழு சந்திர கிரகண அனுபவத்தை பெற முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டில் ஜூன் 5 ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டு உள்ளது. இன்றைய சந்திர கிரகணம் ஆண்டின் முதல் முழு நிலவு (ஓநாய் நிலவு) நாளில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது