வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பாடசாலை மாணவர்களான முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பாஹிம் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் 3 ஏ சிறப்பு சித்திகள் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, தேசியத்தில் 21 வது இடத்தையும் பிடித்துள்ளார்.
அத்தோடு ரசீத் கான் ஹாஜி நுஸ்ரத் சுகைலா எனும் மாணவி உயிர் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெற்று மாவட்டத்தில் 2 ம் இடத்தைப் பெற்றுள்ளதோடு, தேசியத்தில் 13 ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
சாதனைகளை நிலைநாட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்து தந்துள்ள மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று அதிபர் தெரிவித்தார்.