பாராளுமன்றம் 7ம் திகதி வரை ஒத்திவைப்பு


பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி மதியம் 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபைத்தலைவர் தினேஸ் குணவர்தனவினால் பாராளுமன்ற ஒத்திவைப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
08 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் இன்று (03) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் இன்று மதியம் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பாராளுமன்றம் மீண்டும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூட்டப்பட்ட நிலையில் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -