சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது


சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் சைனா மக்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த December மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். பின்னர் இந்த வைரஸ், சைனாவின் பீஜிங் மற்றும் ஷங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது.
முதலில் வுகான் நகரிலுள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேரும், பின் 6 பேரும் உயிரிழந்தனர். பின்பு உயிரிழந்தவர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரில் பஸ் போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ரயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. வுகான் நகர குடியிருப்புவாசிகள் வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 41 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். சைனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று 323 பேர் கூடுதலாக பாதிப்பு அடைந்துள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -