பல்கலைக்கழக அனுமதியை விரிவுபடுத்துவது குறித்து 2 வார கலத்திற்குள் அறிக்கை.
பல்கலைக்கழகங்களில் அனுமதி தொடர்பான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவது குறித்து 2 வார காலத்திற்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக தலைமை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உயர் தரத்தில் சித்தி எய்திய அனைத்து மணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதற்கான சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த உறுதி மொழி தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில் இந்த விடயத்தை கூறினார்.