ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் அதன் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூரின் சொந்த நிதியின் மூலம் தாய், தந்தையை இழந்த வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.உவைஸ், மாதர் சங்கத் தலைவி எப்.நபீரா, பவுண்டேஷன் செயலாளர் எம்.சி.எம்.சம்சுல் முனா, எம்.ஐ.நிரோஷ், எம்.அமானுல்லாஹ், எம்.இஸ்மத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இப்பாடசாலை உபகரணங்களை குறித்த மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.