ஐ. ஏ. காதிர் கான்-
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர், சுமார் அரை மைல் தூரத்திற்கு அதிகமாக நடந்தே செல்ல வேண்டியிருந்த நிலையை சீர் செய்யும் வகையில், அத்தூரத்தைக் கடக்க விசேட இணைப்புச் சேவைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இந்த இணைப்புச் சேவை, 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகிறது.
இந்தியாவுக்கான விஜயத்தினை (28) மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சாதாரண பயணிகளைப் போன்றே அந்த தூரத்தை நடந்தே விமான நிலையத்தை சென்றடைந்தார். அவர் அதன் மூலம் முன்மாதிரியாகச் செயற்பட்டார்.
எனினும், அதனைப் பின்பற்றி எதிர்காலத்தில் அமைச்சர்களும் இவ்வாறு செயற்படுவது அவர்களது முடிவாகும் என்று, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும், அமைச்சர்கள் தமக்குள்ள உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில், அவர்கள் விருப்பம் போல பயணிக்க முடியும் என்றும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
