சுரக்ஷா காப்புறுதியை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை

ஐ. ஏ. காதிர் கான்-
சுரக்ஷா காப்புறுதி மாணவர்களுக்கு முக்கியமானது என்பதால், எவ்விதக் குளறுபடிகளும் இன்றி அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்ப மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதானமான குறித்த காப்புறுதித் திட்டம் இது எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, இக்காப்புறுதி திட்டத்தைப் பயன் பெறும் வகையில் அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நான்கு மில்லியனுக்கும் அதிக மாணவர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாக வௌியான தகவல் அனைத்தும், முற்றிலும் பொய்யானது என்றும், கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -