சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா றகுமானியா நகரைப் பிறப்பிடமாகவும் கட்டையாறை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எம். கஸ்புள்ளா திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். பி. முகைதீன் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக (04/12/2019 )ஆம் ஆண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் 1996 ல் அல் புரூனி இளைஞர்கழகத் தலைவராகவும் 1998ல் அல் அக்ஸா கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளராகவும் இருந்துள்ளார்.
மற்றும் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் கிண்ணியா பிரதேச செயலக கலாசார அதிகார சபை உப தலைவராகவும் இருந்து பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றார்.
எழுத்துத்துறைக்காக உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு மற்றும் கிண்ணியா பிரதேச செயலகத்தால் கவிச்சுடர் என்னும் பட்டம் வழங்கி கெளரவமளிக்கப் பட்ட இவர் அப்துல் மனாபு-பாத்திமா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -