பாதுகாப்பு அதிகாரி காயம்! வெறியர்களை தேடி போலிஸ் வேட்டை!!
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் நேற்று வவுனியா பாவற்குளம் பகுதியில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களை நடாத்தி விட்டு நோய்வாய்ப்பட்ட ஒருவரை சந்திப்பதற்கு சென்ற வேளை அவர் சென்ற வீதியை இடைமறித்த குடிபோதையில் கையில் வாட்களுடன் நின்ற கும்பல் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் வாகனத்தை மறித்து தாக்க முற்பட்ட வேளை,உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினரின் மெய்பாதுகாப்பு அணியினர் துரிதமாக செயற்பட்டதன் காரணமாக மயிரிழையில் காப்பாற்றப்பட்டார்.
இந்தக் கலபரத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடந்த சம்பவத்தை அறிந்த வவுனியா உளுக்குளம் போலிசார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தவுடன் கலகக்காரர்கள் தப்பியோடி விட்டனர்.அவர்களை கைது செய்ய இராணுவமும் பொலிசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் வசிக்கும் வன்னி மாவட்ட முன்னால் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டிலேயே தாக்குதல் சதித்திட்டம் தீட்டப்பட்தாகவும் அவர்களே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை கண்ணுற்ற பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அது தொடர்பில் கருத்து வெளியிட்ட கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் இவ்வாறான கடப்புலித்தனமான காரியங்களை கண்டு தாம் பயப்படவோ அல்லது அரசியலிருந்து பின்வாங்கவோ போவதில்லை என தெரிவித்தார்.
வன்னி அரசியலில் முன்னரும் இவ்வாறான மோசமான சம்பவங்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் கெளரவ நூர்தீன் மஷூர் அவர்கள் மீதும் ஒருசமயம் இந்த இடத்தில் வைத்து இவ்வாறான கொலைவெறித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.
இந்த மோசமான செயற்பாடுகளை குறித்த காடையர்கள் இத்துடன் கைவிடவேண்டும் எனவும் அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.