திருகோணமலை மாவட்டத்தின் வறுமை கோட்டின் கீழ் வாழும் பாடசாலை செல்லும் 1000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி (30 )வைக்கப்பட்டன.
பெமிலி றிலீப் மற்றும் ரெக்டோ நிறுவனங்கள் இணைந்து பாடசாலை செல்கின்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 1000 பேருக்கு இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தின் உள்ள கந்தளாய், தம்பலாகாமம்,பதவிசிறிபுர,கிண்ணியா மற்றும் மூதூர் போன்ற பிரதேசங்களில் வாழுகின்ற வறுமை நிலையிலுள்ள பிள்ளைகளுக்கே இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு கந்தளாய் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருவாளர் முஜீப்,மற்றும் உத்தியோகத்தர்கள்,பெமிலி றிலீப்,ரெக்டோ நிறுவன உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.