கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாடசாலைகள், கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் கல்விசாரா சிற்றூழியர்களின் பதவிப் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், பாடசாலை ஊழியர் பதவிச் சேவை இனிமேல் "உதவியாளர்" எனவும், சுத்திகரிப்பு தொழிலாளி பதவிச் சேவை இனிமேல் "சுத்திகரிப்புச் சேவை உதவியாளர்" எனவும், காவலாளி பதவிப் பாதுகாப்புச் சேவை இனிமேல் "உதவியாளர்" எனவும் மாற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பதவி மாற்றங்களுக்கான அனுமதியை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. இப்புதிய பதவி மாற்றத்திற்கமைய கல்வி அமைச்சின் கீழ் உள்ள 4800 பேரின் பதவிகள் மாற்றமடைகின்றன.
இதேவேளை, மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் மேற்படி பதவிகளை வகிக்கும் கல்வி சாரா பணியாளர்களின் பதவிப் பெயர்களிலும் மாற்றம் மேற்கொள்ளுமாறு, சகல மாகாண கல்வி அமைச்சுக்களையும் கல்வி அமைச்சு கேட்டுள்ளது.