16தினங்களாக மழைபொழிகின்றது. இன்னமும் தரவுகள்தான் எடுக்கின்றீர்கள்: இன்னும் அரசினால் எதுவுமே நடக்கவில்லை!

அம்பாறை மாவட்ட ஒருங்கணைப்புக்குழுக்கூட்டத்தில் தவிசாளர் ஜெயசிறில் வினா
காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து 16 தினங்களாக தொடர்ந்து மழை பொழிந்துகொண்டிருக்கிறது. இன்னமும் தரவுகளும் தகவல்களும் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர இன்னும் சமைத்த உணவோ நிவாரணமோ மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழில் பேசுகையில் ஆக்ரோசமாக தெரிவித்தார்.
மேற்படி கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவியும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிறியாணி விஜேவிக்ரம தலைமையில் நேற்று(10) செவ்வாய்க்கிழமை அம்பாறை கச்சேரியில் நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் காரைதீவுப்பிரதேசம் முக்கியமானது 10ஆயிரத்துக்கும்மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டள்ளனர். சுமார் 50குடும்பங்கள்இடம்பெயர்ந்து உறவினர்வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு இதுவரை அரசாங்கத்தினால் எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. நாம் பிரதேசசபையினால் தான் எமது ஊழியர்களைக்கொண்டு கடந்த 6தினங்களாக சமைத்த உணவை வழங்கிவருகிறோம்.

எமக்குத்தெரியாமல் காரைதீவு மயானமருகே வந்து முகத்தவாரத்தை சிலவிசமிகள் வெட்டியுள்ளனர். இதனால் எமதுமயானம் காணாமல்போகும் அபாயம்ஏற்பட்டள்ளது. இதனை பொலிசாரிடம் முறையிட்டேன்.இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தொடர்மாடி வீட்டுத்தொகுதி கழிவறைக்கழிவுகள் வெடித்து துர்நாற்றமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கென நான்கொண்டுவந்த நிதி இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் இதவரைகாலமும் நடாத்தப்பட்டுவந்த கணனிப்பயிற்சிநெறிக்கு இம்முறை விண்ணப்பம் கோரப்படவில்லை. கேட்டால் அதற்கான ஆசிரியர் இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறதாம் என்று அதற்கு விண்ணப்பிக்க காத்திருந்த மாணவர்கள் பலர் என்னிடம்வந்து முறையிட்டுள்ளனர். ஒரு ஆசிரியர் அல்லது அதிபர் இறந்தால் அப்பாடசாலையை மூடிவிடுவதா? கணணி இல்லாமல் எதிர்காலம் இல்லை என்கிறாக்கள்.ஆனால் இங்கு எல்லாம் தலைகீழ். இதற்கு தீர்வைத்தாருங்கள் என்றார்.
உடனே குழுத்தலைவி சிறியாணி தலையிட்டு தொழிபயிற்சி நிலைய அதிகாரசபை பிரதிப்பணிப்பாளரை அழைத்தார். அவர் வருகைதரவில்லை. அவரை ஒருவாரகாலத்துள் இதற்கான பதிலை தருவதோடு அங்கு பயிற்சிநெறியை தொடர்ந்து நடாத்த அவரை நடவடிக்கை எடுக்குமாறு அரசஅதிபரிடம் உத்தரவிட்டார்.

வெள்ள நிலைமை பற்றி காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜனை அரசஅதிபர் கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்.

காரைதீவுப்பிரதேசத்தில் 1096குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுநிருபப்படி இடம்பெயர்ந்து பொதுஇடங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே சமைத்த உணவு வழங்கலாம். க.பொத. சா.தர பரீட்சை நடைபெறுகின்ற காலம். பாடசாலகைளில் அகதிகளை வைக்கமுடியாது. பாதிக்கப்பட்ட மாணர்களும் அங்க வந்து படிக்கமுடியாது.

அவர்களுக்கு நிவாரணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேசசபையின்தவிசாளர் தற்போது அந்த மக்களுக்கு சமைத்த உணவை வழங்கிவருகிறார். நாமும் நடவடிக்கை எடுத்தள்ளோம் என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -