கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட டெங்கற்ற பாடசாலை போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.
குறித்த பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸார் இணைந்து பாடசாலைகளின் சுற்றுச் சூழலை மூன்று கட்டங்களாக விஜயம் செய்து பார்வையிட்டனர்.
அதில் சுற்றுச் சூழல் அழகிய முறையில் பாராமரிக்கப்பட்டு டெங்கற்ற சூழலாக வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயம் காணாப்பட்டதால் அதற்கு முதலிடம் கிடைத்துள்ளதோடு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை இரண்டாமிடமும் தியாவட்டவான் அறபா வித்தியாலயம் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலைகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் அவர்களின் தலைமையில் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.