அமைதிக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக சட்டம் கடுமையாக செயல்ப்படுத்தப்படும் - ஊடக அறிக்கை


ண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மத்தியில் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம். எதிர்வரும் நாட்களில் பாதுகாப்புக் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், மற்றும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புடன் இருக்குமாறும், அந்தந்தப் பகுதிகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமேதகு ஜனாதிபதியின் தூர நோக்கிற்கு அமைய இன, மத மற்றும் அரசியல் வேறுபாடுகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கும் வகையில் நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும். மேலும் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபர்களுக்கும் அல்லது குழுக்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -