வெகுஜன ஆளுகைக்குள் துரித வளர்ச்சி காணும் காதர் மஸ்தான்.


இமாம் றிஜா-
ன்னி பெருநிலப்பரப்பின் பெயர் போன ஒரு உயர்ந்த நாமம் என்றால் அது காதர் மஸ்தான் என்பதை மறுப்பதற்கில்லை. முன் அரசியல் அனுபவம் இல்லாத காதர் மஸ்தான் அவர்களின் அரசியல் வருகையானது உண்மையில் முதலில் பிரமிக்கப்பட்டு தற்பொழுது வியப்படையச் செய்கின்றது. அவரது முதல் நாடாளுமன்ற பிரவேசமானது ஒரு விசப் பரீட்சைக்கான போராட்டமாகும். இருப்பினும் எந்தவித தங்கு தடையுமின்றி சுலபமான முறையில் நாடாளுமன்ற ஆசனம் அவருக்காய் காத்திருந்தது.

2015ம் ஆண்டு தேர்தலில் மூத்த அரசியல்வாதிகளுடன் போட்டியிட்டு அதுவும் மக்களின் பார்வையில் வேண்டா வெறுப்பை ஏற்படுத்திய வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற ஆசனத்தை தனதாக்கிக் கொண்டார். காரணம் மக்கள் அவர் மீது கொண்ட நல்லபிப்பிராயமும் நற்பெயருமேயாகும்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 1990ம் ஆண்டிற்கு பிற்பாடு ஒரே தடவையில் நாடாளுமன்ற ஆசனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட பெருமையும் முஸ்லிம் என்ற அடிப்படையில் மர்ஹும் மசூர் ஹாஜியார் அவர்களிற்கு பிற்பாடு காதர் மஸ்தான் அவர்களையே சாரும்.
எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு அதிஷ்டசாலி என்று கூட கூறினால் அதனை யாராலும் மறுத்துரைப்பதற்கு இல்லை. முதல்ஸ்ரீ முறையான பாராளுமன்றத்தின் பிரவேசத்திற்கு பிற்பாடு ஒரு தரமான பிரதி அமைச்சுப் பதவி ஒன்றும் அவரைத் தேடி வந்தது. குறுகிய கால பிரதி அமைச்சாக இருந்தாலும் அவரின் புத்தி சாதுரியத்தால் பல மில்லியன் ரூபாய் செலவிலான அபிவிருத்தியால் வன்னி மண் வளம் கண்டது.

இது இவ்வாறு இருக்க நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரசியல் முதிர்ச்சி கண்ட சிறுபான்மைச் சமூகத்தின் தலைமைகள் சஜித் பிரேமதாச அவர்களை ஒருமித்த குரலில் ஆதரித்த போதும் ஒரு தனிமரமாய் அதாவது மக்களின் ஆணையின்பால் நாடாளுமன்றம் சென்ற அவர் துணிவோடும் உறுதியான நம்பிக்கையோடும் மக்களின் கசப்பான பார்வைக்கு மத்தியிலும் எதிர்கால அரசியல் நிலையை நிகழ்காலத்தில் சாதூரியமாக புரிந்து கொண்ட அவர் பல நெருக்கு வாரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களை ஆதரித்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல்வாதிகள் ஊடகங்கள் மூலம் அவருக்கான விமர்சனக் கருத்துக்களை அள்ளி வீசினர்.

கடைசியில் நடந்தது என்ன?

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் பல இலட்சம் வாக்குகள் முன்னிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
காதர் மஸ்தான் அவர்களின் குறுகிய அரசியல் பயணத்தில் மற்றுமொரு அதிஷ்டத்தை வரலாற்று அரசியல் பதிவு செய்து கொண்டது. வன்னி அரசியலில் காதர் மஸ்தான் அவர்களின் செயற்பாடு கடின உழைப்பாக இருந்தாலும் அவருக்கு கிடைக்கும் முடிவுகள் இறைவனின் உதவியால் இலகுவானதாக அமைந்தது.
இது இவ்வாறு இருக்க இன்றோ நாளையோ வன்னி மக்களின் விடிவுக்காக ஒரு அதிஷ்டம் காத்துக்கொண்டு தான் இருக்கின்றது.

பெருநிலப்பரப்புக்கான ஒரு அமைச்சையோ அல்லது பிரதி அமைச்சையோ காதர் மஸ்தான் அவர்கள் தக்கவைத்துக் கொள்வார் என்ற அவதானம் இன்று பரவலாக பேசப்படுகிறது.
வன்னிக்கான முழு அதிகாரமும் வழங்கப்பட்ட ஒரு சேவகனாக போர் கண்ட பெருநிலப்பரப்பின் நிலையான அபிவிருத்தியை வேண்டி நிற்கும் சமூகம் ஒரு தன்னிறைவை அடையும் என்ற ஏக்கம் விரைவில் விடைபெறும் என்ற நோக்கத்தோடு காத்திருப்பவர்களின் கனவுகளும் அபிலாசைகளும் என்றும் வீணடிக்கப்படமாட்டாது என்ற உறுதி மொழியுடன் இவைகளை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -