மூதூர் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.இதில் மூதூர் பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்கள் 24 பேரில் 23 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதோடு சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏம்.நௌபால்தீன் மாத்திரம் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு பெரும்பான்மையினால் மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
2020 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்ட நிதியாக 180 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதி ஆகக் கூடுதலாக வீதி மின்விளக்கு பொருத்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தை விட 2020 ஆம் ஆண்டுக்கான வரவு சிறப்பாக இருப்பதாக சகல உறுப்பினர்களும் சிலாகித்து பேசியமையும் குறிப்பிடத்தக்கது.
