ஐ. ஏ. காதிர் கான்-
வணிக நகரான கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே, பாதுகாப்புச் செயலாளர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

போக்குவரத்து முறைமையினைக் கையாளுதல் மற்றும் இதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நீடித்த தீர்வுகளைக் காணுமாறும், பாதுகாப்புச் செயலாளர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.