மஹ்மூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு -பிரதம அதிதி ஹரிஸ் எம்.பி


ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 2017,2018ம் ஆண்டுகளில் பல்கலைக்கழகம் சென்ற மாணவிகளையும், 2017,2018ம் ஆண்டுகளின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவிகளுக்கும் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண மட்டம்,தேசிய மட்டங்களில் முதல் நிலை பெற்ற மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் யூ.எல் அமீன் அவர்களின் தலைமையில் இன்று(26) கல்லூரியின் ராசீக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக கல்முனை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.பி நஸ்மியா சனூஸ்,கல்முனை ஆதார(வடக்கு) வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரசீன் முஹம்மட், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப், டாக்டர் சாபி சிஹாப்தீன்,கல்முனை பிராந்திய பாடசாலையின் அபிவிருத்தி குழு செயலாளர் டாக்டர் ஏ.வாஹிதீன்,டாக்டர் அல் அமீன் ரிசாட்,முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் நெளபர் ஏ பாவா,முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது முக்கியஸ்தகர் எம்.எம் பாமி,உட்பட வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -