புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சா் சீ.வி ரத்னயாக்க கொழும்பு 10ல் உள்ள போக்குவரத்து அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அங்கு அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ் தேவி புகையிரதம் தடைபட்டு விபத்துக்குள்ளாகியு்ளளது. இது சம்பந்தமாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளருக்கு உடன் அறிக்கை ஒன்று சமா்ப்பிக்குமாறு கேட்டுள்ளேன் இவ் விடயம் உண்மையாக விபத்தா அல்லது நாசகார வேலையா ? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்கச் வின் ஆட்சியில் தான் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்குக்கு புகையிரதம் பெருந்தெருக்கள் புனா் வாழ்வுத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் வடக்கு மக்கள் அதனை உணரவில்லை அவா்கள் மீள உணா்ந்து எதிா்காலத்தில் எமது ஜனாதிபதி கோட்டபாய மற்றும் மகிந்த ராஜபக்ச அரசில் இணைந்து கொண்டு நமது பகுதிகளை அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். எனவும் சீ.வி. ரத்ணாயக்க தெரவித்தாா்.