இஸ்ஸதீன் றிழ்வான்-
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானின் முன்னெடுப்புக்கள், திட்டங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றி பகிஸ்தானிய மக்களை வெகுவாக நம்பச்செய்துள்ளது.
இந்திய மக்கள் தங்களது பிரதமர் மீது நம்பிக்கையின்றி மாற்றுவழி குறித்து சிந்தித்தாலும் மாநில மட்டத்தில் பல மாற்றங்களை காணமுடிகிறது.
இந்திய தலைநகர் தில்லியில் அரவிந்த் கெஜிரிவால் அவர்களின் திட்டங்கள், ஆந்திர மாநில முதல்வர் ஜகன் மோகன் ரெட்டியின் திட்டங்கள் மேற்கு வங்கால மாநில அரசியலில் புதிய குரலான மாகுவா மெய்த்ராவின் புதிய சிந்தனைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கையில் பச்சை சிவப்பு ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதாலும் அவ்விரண்டு கட்சிகளிலும் இனவாதம், கட்சிவாதம் சரமாறியாக பேசுவதால் எதிர்கால இலங்கை கேள்விக்குறிதான்.
ஆசியாவின் ஆச்சரிய இலங்கை ஒன்றை உறுவாக்குவதற்கு 3வது ஒரு சக்தி தேசைப்படுறது,
மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியவசிய வசதிகள் சென்றடையாத கிராமங்கள் / குடிசைகள் இன்னும் இலங்கையில் இருக்கும் நிலையில் கொழுன்பில் இருந்துகொண்டு குக்கிராமங்களின் எதிர்காலம், அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற ஆட்சியாளர்களால் சுவீட்சமான நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
சரியான பொருளாதார கொள்கை,
நிலையான வெளிநாட்டுக்கொள்கை,
திடமான அரசியல் சிந்தனை பற்றிய போதிய அறிவற்றவர்களே நம்மை ஆட்சி செய்துகொண்டுக்கின்றார்கள் என்பதைத்தான் கடந்த 70 வருடங்களில் காணமுடிகிறது.
மாற்றங்கள் வேண்டி ஒன்றிணைந்த சிவில் சமூகத்தின் சரியான தேர்வு குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மாற்றங்களை செய்வோம், சொல்லாமல், சொல்லிக்கொண்டே இருக்காமல்..