ஐ.நா வீடமைப்பில் பிரபலமான ஜனாதிபதியின் புள்ளயா ? குற்றவாளி என கூண்டில் நிற்கும் கோட்டா - பய புள்ளயா ? தீர்மானிக்கும் தேர்தல்

திலகர் எம்பி ஆவேசப் பேச்சு
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்- 
லங்கையின் இரண்டு பெயர்கள் ஐக்கிய நாட்டு சபை அரங்கில் பிரபலமானவை. ஒன்று ஏழை எளிய மக்களுக்கு வீடமைத்து சர்வதேச புகழ்பெற்று 1987 ம் ஆண்டை சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனம் செய்ய வழிவகுத்த சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாச. இரண்டாம் அவர் மக்களை வெள்ளை வேனில் கடத்தியும் கொத்து கொத்தாக கொன்று குவித்து ஐ.நா முன்பு குற்றவாளி கூண்டில் நிற்கும் சர்வதேச குற்றவாளி கோட்டாபய ரஜபக்‌ஷ. சஜித் அந்த ஜனாதிபதி புள்ள.எனவே இந்த ஜனாதிபதி தேரத்தலானது, ஐ.நா வீடமைப்பில் பிரபலமான ஜனாதிபதியின் புள்ளயா ? குற்றவாளி என கூண்டில் நிற்கும் பய புள்ளயா ? தீர்மானிக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவிதுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமசாசவுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலை நகர மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடாத்திய மாபெரும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்உரையாற்றுகையில்,
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீங்கள் உங்களை மலையகத் தமிழர்கள் என கௌவரமான நிலைக்கு உயர்த்திக் கொண்டுள்ள போது கோட்டபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 82 வது அம்சமாக தோட்டத் தமிழர்கள் என்று குறிப்பிட்டுள்ளது எனக்குறிப்பிட்டார். நான் அந்த 82 வது அம்சமாக என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் சொல்கிறேன். எங்கள் நிலத்தில் எங்கள் வீடு என எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொடுத்த தனி விட்டுத் திட்டத்துக்கு மாறாக மாடி லயத்தை மீள கொண்டுவரும் யோசனையே அதில் முன்வைக்கப்பட்டுள்ளது. கூடவே நான் 1994 ஆண்டு வெளிவந்த “ காங்கிரஸ்” பத்திரிகையும் கொண்டு வந்துள்ளேன். அதில் மலையகத்தில் தனிவீட்டுத் திட்டம் சாத்தியமில்லை. அது பகல் கனவு. லயத்து வீடுகளையும் அதுசார்ந்த நிலத்தையும் சொந்தமாக்குவதே ஒரே தீர்வு என குறிப்பிடப்பட்டுள்ளது. சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலேயே பகல் கனவு என சொன்ன விடயத்தை தவிடுபொடியாக்கி சொந்த நிலத்தில் தனி வீடு என செயற்படுத்திக் காட்டியவர் எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
என்னிடம் இன்னுமொரு பத்திரிகையும் உள்ளது. அது பழைய பேப்பர் இல்லை. புதிய பேப்பர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி வெளிவந்த சூரியகாந்தி பேப்பர். அதில் முன்பக்க செய்தி மலையகத்தில் நவீன கிராமம் - ஆறுமுகம் தொண்டமான். அந்த செய்தியின் தொடர்ச்சி இவ்வாறு சொல்கிறது. மலையகத்தில் இதுவரை இல்லாத நவீன கிராமம் அமைக்கப் போகிறோம். வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்துக்கும் தலா 300 வீடுகள் வீதம் 600 வீடுகள் அமைக்க நிதி வழங்கியுள்ளார்” அன்று அவர்கள் எதிர் கட்சியில் இருந்தாலும் கூட எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் அவர்களுக்கு நவீன கிராமம் அமைக்க நிதி கொடுத்துள்ளார். அந்த இரண்டு நவீன கிராமங்களையும் எங்கே அமைத்தார் ஆறுமுகன் ? அதனை காட்டினால் நாளை காலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகத்தயார்.
இப்படி எங்கு போனாலும் ஒட்டிக்கொள்வா அவர்கள் நல்ல வசனம் ஒன்றை வைத்து இருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவுடன் ஒட்டிக்கொண்டு என்றும் நாங்கள் உங்களுடன் என்றார்கள். அவர் தோற்றமும் நாம் வெற்றிபெறச்செய்த மைத்திரிபால சிரிசேனவுடன் பொதுத்தேர்தலில் ஒட்டிக்கொண்டு என்றும் நாங்கள் உங்களுடன் என்றார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிந்த கையோடு நுவரெலியாவில் இருந்து ஹட்டன் போகும் வழியில் அந்த 40 பஸ்ஸில் அவர்களது தேசிய மாநாட்டை நடாத்தி அம்பிகா சந்தியில் சி.பி.ரத்நாயக்காவுடன் சேர்ந்து கொண்டு என்றும் நாங்கள் உங்களுடன் என்றார்கள். இவர்கள் நிச்சயமாக எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றதும் என்றும் நாங்கள் உங்களுடன் என ஒட்டிக்கொள்ள வருவார்கள். இப்படி யார் வந்தாலும் ஓடிப் போய் ஒட்டிக்கொண்டு என்றும் நாஙகள் உங்களுடன் என மக்களுடன் இல்லாத இ.தொ.கா வா ? அல்லது என்றும் மக்களுடன் கைகோர்த்து செயற்படும் உரிமைகளை வென்று எடுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியா என தீர்மானிக்கும் தேர்தல் இந்த ஜனாதிபதி தேர்தல்.
நாம் சிறுவர்களை புள்ள என அழைப்பதுண்டு. அதுவும் குழப்படி செய்யும் சிறுவர்களைத்தான் பய என பேசுவோம். சஜித் ஏழை மக்களின் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச வின் புள்ள. அடுத்தவர் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்கும் கோட்டா - பயபுள்ள. எனவே மக்கள் ஜனாதிபதி புள்ளயா ? பயபுள்ள யா என தீர்மானிக்கும் தேர்தல் இது என்றும் குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -