மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளிப்பண்டிகையையொட்டி ஒருதொகுதி புத்தாடைகள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலினால் வழங்கிவைக்கப்பட்டன.
காரைதீவு பிரதேசசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற வெள்ளைப்பிரம்புதினத்தில் கிடைக்கப்பெற்ற உதவியைக்கொண்டு இப்புத்தாடைகள் வழங்கப்பட்டன.
கூடவே மேலுமொரு உதவிப்பொருட்களும் எல்ஈடி மின்விளக்கும் அன்பளிப்புச்செய்யப்பட்டன.
இதேவேளை லண்டனில் வாழும் காரைதீவு அன்பரான எஸ்.பாலசுரேஸ் விழிப்புலனற்றோரின் இசைக்குழுவிற்கென அன்பளிப்புச்செய்த வாத்தியக்கருவிகளும் ஒலிக்கருவிகளும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.
சங்கத்தலைவர் பி.கிருஸ்ணகுமார் ஏற்புரைவழங்குகையில் விழியில்லாத எங்களை வழிநடாத்த விழியுள்ளவர்கள் இவ்வுதவிகளை வழங்குவதையிட்டுநன்றிகூறுகிறேன். குறிப்பாக தவிசாளர் ஜெயசிறில் அண்ணாவின் ஏற்பாட்டில் காரைதீவில் நடைபெற்ற வெண்பிரம்புதின நிகழ்வு எங்களுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத பதிவாகும் என்றார்.