தேசிய மற்றும் நிபுணத்துவ அமைப்பு-
நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பேசுவதாக/செயற்படுவதாக இன்னும் சமூக வலைத்தளங்கள்களில் பதிவுகள்/தேர்தலுக்கு முன்னரான பதிவுகளை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது .இந்த ஜனாதிபதி நாட்டின் சகல இன மக்களையும் அனுசரித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடமைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
முஸ்லீம் சமூகத்தை தவறான பிரச்சாரத்தில் வழிநடத்திய இரண்டு முஸ்லீம் இனவாத தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். வடகிழக்குற்கு வெளியே அதிகமான முஸ்லீம்கள் இந்த இரண்டு தலமைகளின் இயலாமையை மக்கள் இனம்கண்டுள்ளனர்.
ஆகவே அடுத்த 5வருடத்திற்கான ஆணையை இந்த முஸ்லீம்களை தொடர்ந்து உணர்வூட்டும் செயற்பாடுகளால் மாற்ற முடியாது. ஆதலால் முஸ்லீம் இளைஞர்களை முகநூல் ஊடாக தூண்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர் .
இது பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த சட்டத்தின் கீழ் சில சமூகவலத்தளங்கள் ஊடான இனவாத பிரச்சாரங்களும் உள்ளடங்கும்.கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லீம்களை இவர்களால் இதுவரை பாதுகாக்க முடியவில்லை..உங்களைத் தூண்டி பதிவிடுகின்ற செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவது யார்???
இந்த நிலையில் தற்போதைய அரசுக்கு எதிரான முகநூல் பிரச்சாரங்களை செயற்படுத்துவர்களுக்கு பாதுகாப்பு யார் வழங்குவது? குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் சிலரின் தொடர்ச்சியான இனமுறுகலை உருவாக்கும் பதிவுகள் பாரிய விளைவை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக மத்திய கிழக்கில் இருக்கின்ற சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக இனவாத பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.உங்களின் குடும்பம் நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்ற சூழல் ,அவர்களின் தேவைகளை முஸ்லீம் நாடுகள் வழங்குவதில்லை.அத்துடன் இலங்கை முஸ்லீம்கள் தாக்கப்பட்ட போது அமைதியாக இருக்கின்ற இந்த முஸ்லீம் நாடுகளில் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இந்தியா ,கனடா பற்றும் ஐரோப்பிய நாடுகள் உற்பட ஐக் கிய நாடுகள் சபை பேசுகின்றது.எங்களுக்காக யாரும் பேசுவதில்லை ..நாங்களே பேசவேண்டும்.
எங்களை இந்த அரசுக்கு எதிரிகளாக்கும் கருணா,பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களின் நிகழ்ச்சி நிரலும் உள்ளது.
எமது வாக்குகள் மூலமே ஐனாதிபதி மற்றும் ஆட்சி அமைய முடியம் என்பதே எமது பலமாக இருந்தது.இந்த பலத்தால் எமது முஸ்லீம் தலமைகள் தங்களை அதிகம் வளர்த்துக் கொண்டனர்.இதற்காக எங்களுக்குள் இனவாத்தை ஊட்டி பதவிகளை தக்கவைத்தனர்.
இந்த நிலமை தற்போது மாற்றம் கண்டுள்ளது.ஆதலால் நாங்கள் சற்று தளர்வுப் போக்குடன் செயற்பட வேண்டும்.அடுத்த பாராளுமன்றத தேர்தலில் இந்த நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் வெற்றி பெற்றால் ?? நாம் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் எதிரானவர்களாக முத்திரை குத்தப்படுவோம்.
இந்த நிலையில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையையும் சகவாழ்வையும் உருவாக்கும் செயற்பாடு அவசியமாகிறது. இந்தப் பொறுப்பை அரசாங்கம் முன்னெடுக்கும். மாறாக இதனை குழப்பும் வகையில் முஸ்லீம் சமூகத்தில் தவறான மற்றும் இனவாத பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சகல நபர்கள் மற்றும் ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
உங்களின் பாதுகாப்பு இந்த நாட்டு பிரஜைகள் என்ற வகையில் அரசின் பொறுப்பு.கடந்த 30 வருடகால பயங்கரவாத சூழ்நிலைக்கு நாட்டை மீண்டும் தள்ள முடியாது.அதே நேரம் நாட்டில் பதவி மற்றும் தனிப்பட்ட சலுகைகளுக்காக அப்பாவி முஸ்லீம்களை சில தலமைகள் தூண்டுவது ஏற்கமுடியாது.
தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தில் பல முஸ்லீம் தலமைகளும் உள்ளனர்.ஆகவே இவர்களுடன் கலந்தாலோசித்து முஸ்லீம்களுக்கான பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை அரசு மேற்கொள்ளும்.அரசாங்கத்துடன் பின்காதவால் பேசிக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் நமது முஸ்லீம்களின் எதிர்கால அரசியலை நிதானமாகவும் திட்டமிடல் உடனும் முன்னெடுக்க வேண்டும்.அதற்கான பேச்சுவார்த்தை பல்வேறு மட்டங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முடக்கி விடப்பட்டுள்ளது .இதனால் அனுசரித்துக் கொண்டு எங்களது உரிமைகளை பாதுகாக்கலாம்.மாறாக முரண்பிடித்தால் இழப்புக்களே அதிகம்.
நமது சிந்தனைகளை மீள்பரிசீலனை செய்வோம்.