கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தினூடகச் சென்ற ஓட்டோ ஒன்று, வீதியை விட்டு விலகிச் சென்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், பாலத்தினூடக அமைக்கப்பட்டிருந்த நீர்க்குழாய்க்கும் பாலத்துக்கும் இடையில் குறித்த வண்டி சிக்குண்டு இருந்ததால் ஓட்டோ சாரதி தெய்வாதீனமாக உயர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காக்காமுனையிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இவ்விபத்து இன்று(22) இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கி.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
