ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து ஒன்றாய் முன்னோக்கி மாபெரும் வெற்றிக் கூட்டம் கிண்ணியா பைசல் நகர் பகுதியில் இடம் பெற்றது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் தலைமையில் இன்று (11) மாலை இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
குறித்த மக்கள் பேரணியின் கூட்டத்தில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி,நிஸார்தீன் முஹம்மட் மற்றும் கிண்ணியா நகர சபை உறுப்பினர் அஸ்மி உட்பட வட்டார வேட்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.