இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில்
கலாபூஷணம் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் நடாத்தும் மீலாத் கவியரங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில் எதிர்வரும் பத்தாம் திகதி மீலாத் தினத்தன்று பிற்பகல் 1.05 க்கு ஒலிபரப்பாக உள்ளது.“பண்புகளில் மாண்பு நம் பயகம்பர் நபி வாழ்வு” எனும் தலைப்பில் இடம்பெறும் இக்கவியரங்கில் ஹுனுபிட்டிய, கமர்ஜான் பீபி “தாய்மார்களின் தந்தை” எனும் தலைப்பிலும், முல்லைத் தீவு ஜெம்ஸித் அஸீஸ் “வழங்கலில் வள்ளல்” எனும் தலைப்பிலும், பொலொன்னறுவ, இராணி பெளஸியா “பொறுமையின் பெருமை” எனும் தலைப்பிலும், வெலிகம, ‘கலைமகன்’ இஸ்மாயில் எம் ஃபைரூஸ் “தலைவர்களின் தலைமகன்” எனும் தலைப்பிலும் கவிதைகள் பாடுகின்றனர்.
இம்மீலாத் கவியரங்கில் கவிபாடும் ஐவரும் வட, மத்திய, வடமத்திய, தென், மேல், எனும் ஐந்து மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், கவியரங்கை நடாத்துபவரைத் தவிர ஏனைய நால்வரும் முஸ்லிம் சேவை கவியரங்கத்துக்கு புதியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.