இலங்கை எட்டுவது ஜனாதிபதி தேர்தலில் ஏழாவது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள கோட்டபாய ராஜபக்ஸவின் வெற்றியினை தொடர்ந்து ஆதவரலாளர்கள் பல்வேறு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர.; அதனை தொடர்ந்து கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் நேற்று (18) அனுராதபுரத்திலுள்ள ரூவன்வெளிசாயவில் ஜனாதிபதியாக சத்தியபிரமாணம் செய்து கொண்டார் .
இந்த சத்திய பிரமாணத்தினை முன்னிட்டு ஆதரவாளர்கள் நேற்றைய தினம் வீதி ஓரங்களில் பாற்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
இன்றைய தினம் அவரது பதியேற்பினை முன்னிட்டு மலையகத்தில் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்த கட்சிகளில் ஒன்றான அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர்.கிசானின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (19) புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடு ஒன்று டிக்கோயா அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இதில் நாட்டில் சாந்தி சமாதானம் சகவாழ்வு அபிவிருத்தி ஆகிய ஏற்பட வேண்டி பிராத்தனைகளும் இடம்பெற்றன.
இதே நேரம் ஹட்டன் நகர் வர்த்தகர்கள் கோட்டபாய ராஜபக்ஸவின் பதவி யேற்பினை முன்னிட்டு பாற்சோறு சமைத்து பொது மக்களுக்கு வழங்கி மகிழச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விசேட பூஜை குறித்தும் கோட்டபாயவின் வெற்றி குறித்தும் கருத்து தெரிவித்த அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் வைத்தியருமான வைத்தியர் கே.ஆர்,கிசான் கருத்து தெரிவிக்கையில்...
நுவரெலியா மவாட்டத்தில் மாத்திரமன்று தமிழ் மக்களுடன் இணைந்து கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் வெற்றிக்காக உதவி செய்தோம்.ஆனால் சில விசம சக்திகள் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. என்று வதந்திகளை பரப்பிவருகறார்கள்.ஆனால் அதில் எவ்வித உண்மையும் கிடையாது. கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததில் விகிதாசாரம் குறைவாக இருக்கலாம.; ஆனால் அவருக்கு எவரும் வாக்களிக்கவில்லை. என்பது முற்றிலும் பிழையானது. மலையகத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் கோட்டபாய ராஜபக்ஸவுக்கு சுமார் 30 சதவீத வாக்குகளை தமிழ் மக்கள் பெற்றுக்கொடுத்துள்ளார்கள். வெறுமனே நுவரெலியா மாத்திரம் வைத்துக்கொண்டு பார்க்கக் கூடாது. நுவரெலியா வெளியிலும் 450 மேற்பட்ட தோட்டங்கள் உள்ளன. அவர்கள் கோட்டபாயவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்,ஆகவே கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஒரு இனத்திற்கு மாத்திரம் ஜனாதிபதியல்ல. இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இனத்துக்குமே அவர் ஜனாதிபதிதான் ஆகவே சிறுபான்மை மக்கள் எவ்வித்திலும் அச்ச கொள்ள வேண்டிய தேவையில்லை. ஒரு காலத்தில் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு கூடி போக முடியாத காலமிருந்தது அந்த நிலையினை மாற்றியவர் கோட்டபாய ராஜபகஸவும் அவர்களது அரசாங்கமும் தான். ஆகவே ஏனைய அரசாங்கத்தில் இருந்த பாதுகாப்பினை விட இந்த அரசாங்கத்தில் கூடுதலான பாதுகாப்பு சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும்;.
அதே நேரத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்திருந்தார.; அதனை செய்வார் என நம்புதோடு இன்று தொழிற்சங்களை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படகின்ற அபிவிருத்தி நிலைகள் மாற்றம் பெற வேண்டும.; ஏனெறால் தொழில் துறைகளுக்கு அப்பால் ஆசிரியர்கள் ,வைத்தியர்கள், தோட்ட உத்தியோகஸ்த்தர்கள், மதகுருமார்கள், வர்த்தகர்கள் என பலரும் இருக்கின்றனர் எனவே அவர்களின் வாழ்க்கை விருத்தி செய்வதற்கான வேலைத்தி;ட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்,மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கோட்டபாய ராஜபக்ஸ நடவடிக்கை எடுப்பார.; என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனவே மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றங்களை சந்திக்காமல் எதிர்வரும் தேர்தல்களில் அருணலு மக்கள் முன்னணியுடன் இணைந்து. தொடர்ந்து, கோட்டபாய ராஜபக் ஸ அவர்களை ஆதரித்து எமக்கு தேவையான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு அருணலு மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.