நான்கு விசேட புகையிரத சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட வார இறுதியுடனான விடுமுறை காரணமாக, பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் விசேட புகையிரத சேவைகள் இயங்குமெனவும், புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பு, கோட்டையிலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.33 மணிக்கு பதுளையைச் சென்றடையவுள்ளது.
அத்தோடு, இரவு 8.00 மணிக்கு பதுளையிலிருந்து புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.