கோட்டபாய சிறுபான்மை வாக்குகள் இன்றி வெல்வேன் என்று தெரிவித்திருப்பது. அவருடன் இருக்கும் சிறுப்பான்மை மக்களை கொச்சைப்படுத்தியதாகவே அமைகிறது.


அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கோட்டபாய ராஜபக்ஸ சிறுபான்மை வாக்குகள் இன்றி வெல்வேன். என செல்லும் இடங்களில் தெரிவித்து வருகிறார.; இது முழு சிறுபான்மை மக்களையும் கொச்சைப்படுத்துவதுடன் அவருடன் இணைந்து இருக்கின்ற சிறுபான்மை மக்களையும் இழிவுபடுத்துவதாக அமைகிறது. என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக ஒன்றாக முன்னோக்கிச் செல்வோம்.எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நுவரெலியா பகுதியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ...
இந்த நாட்டில் 70 சதவீதம் பெரும்பான்மை மக்கள் இருந்தாலும் 30 சதவீதம் சிறுபான்மை மக்கள் இந்த தேர்தலிலே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.ஆகவே இவ்வாறு பேசுவது அவரn;களை இழிவுபடுத்துவதாகவே அமைகின்றது.
ஆனால் சஜித் பிரேமதாச அவர்கள் எல்லா மக்களையும் எல்லா மதங்களையும் அனுசரித்து போகும் வகையில் இருப்பதனால் அவருடைய வெற்றி நிச்சயப்டுத்தியதாக அமைந்துள்ளது.
ஆகவே அவருக்கு வாக்களிபப்தன் மூலம் இன மத பேதங்களை மறந்து இன குரோதங்கள் நீக்கப்பட்டு சமூக சிந்தனையோடு செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்பதனை நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
எனவே தான் அதிக பகுதிகளில் சிறுபான்மை கட்சிகள் அவருக்கு உதவி செய்ய முன் வந்திருக்கின்றார்கள்.
அதே நேரம் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை சேர்ந்த அணியினர் முன்னெடுக்கும் சிறுபான்மையை இழிவு படுத்து செயலினை மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -