திருகோணமலை கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2100 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞயொருவரை நேற்றிரவு(13) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரநாயக்க மாவத்தை,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ஹேரொயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு போதைப் பொருள் வழக்குகளும் சந்தேக நபருக்கெதிராக நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் 2100 மில்லிகிராம் ஹேரொயின் போதை பொருளை வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.