SLFP தலைவர் பதவியில் இருந்து விலக ஜனாதிபதி தீர்மானம்?


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டமையினால் கட்சிக்குள் குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனத்தை வழங்கியிருந்த ஜனாதிபதி தற்போது கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நேற்று (செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை செல்லுபடியாகும் என அறியமுடிகின்றது.
குறிப்பாக தேர்தலில் நடுநிலை வகிக்கவும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்திருந்த நிலையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற ஜனாதிபதியின் முடிவு சுதந்திர கட்சியின் மத்தியக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த விடயம் நாடு முழுவதும் உள்ள சுமார் 160 கட்சி அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -