எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாககல் செய்யப்பட்டுள்ளது.
கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட அந்த ஆணைக்குழுவின் நான்கு உறுப்பினர்களும் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தேர்தலின் போது சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அதனூடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு உத்தடவிடுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதெ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -