விசேட கல்விப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் முதலாவது பகுதி நேற்று முன்தினம்(10) கொழும்பு மீகொட மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த ஜே.எம்.மாஹிஸ்
எனும் மாணவன் Collecting Cubes போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி மூன்றாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை புரிந்துள்ளார்.
மேலும் இத் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் வாரம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் இப்பாடசாலையை சேர்ந்த ஜே.எப்.ஜெஸ்னா .மற்றும் எம்.என்.வலீத்
ஆகிய மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த மாதம் மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டியில் கலந்து கொண்ட இவ் 3 மாணவர்களும் முதலாம்,இரண்டாம் இடங்களை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானமை குறிப்பிட்டத்தக்கது.
இம் மாணவர்களை நெறிப்படுத்திய பாடசாலையின் விசேட கல்விப் பிரிவு ஆசிரியைகளுக்கும் மேலதிக பயிற்சிகளை வழங்கிய உடற்கல்வி பிரிவினருக்கும் மற்றும் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி இம்மாணவர்களை ஊக்குவித்து ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்களின் பெற்றோர்களுக்கும்
பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல்ரசாக் தனது நன்றியினை தெரிவித்தார்.