ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணவர்தன தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- கல்வி அழியுமாயின்; எந்த சட்டமும் எந்த ஒரு சுற்று நிருபமும் இருந்து பயனில்லை. இவை அனைத்தும் தேவை;படுவது கல்வியினை அபிவிருத்தி செய்யவே ஆகவே நான் எந்நேரமும் கூறியது. எந்த ஒரு முடிவினை நல்லெண்ணத்துடன் எடுங்கள் அதன் பின்னால் நான் இருக்கிறேன். ஒருவருக்கு தனிமையில் ஒரு மாகாணத்தினை முன்னேற்ற முடியாது.எமக்கு எல்லா துறைகளிலும் தலைவர்கள் இருக்க வேண்டும். எனவே இந்த திறமையாளர்களை எதிர்காலத்தில் அதிபர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையானவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் இருப்பது அவ்வாறான ஒரு நிலையல்ல.வேலை செய்பவருக்கு இடமில்லை. அவர்களுக்கு பரீட்சைகளுக்கு படிப்பதற்கும் நேரமில்லை.ஆனால் வேலை செய்யாதவர்கள் பரீட்சைக்கு நன்கு ஆயத்தமாகி பரீட்சையில் சித்தி பெறுகிறார்கள.; பின் பதவிகளுக்கு வருகிறார்கள். அடி மட்டத்திலிருந்து வேலை செய்தவந்தவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. எனவே பதவி உயர்வு வழங்குவது என்றால் அடி மட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இல்லாவவிட்டால் நாடு என்ற வகையில் நாம் முன்னேற முடியாது என ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்தில் கஸ்ட்டப்பிரதேசங்களில் சேவையாற்றி அதிகமான மாணவர்களை புலமை பரிசில், க.பொ.த சாதாரண தரம் உயர் தரம் ஆகியவற்றில் சித்திபெற செய்த ஆசிரியர்கள் அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் உட்;;;;பட ஹட்டன் கல்வி வலயத்தின் அலுவலர்கள் கௌரவிக்கும் ஸ்ரீ அபிமானி விருது விழா இன்று ( 12) ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கஸ்ட்ட பிரதேசங்களில் சேவையாற்றி சாதனை படைத்த தமிழ் சிங்கள ஆசிரியர்கள் அதிபர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், காரியாலய அலுவலர்கள் உட்பட 90 பேருக்கு விருதுகள்,பதக்கங்கள்,;,சான்றிதழகள்,; ஆகியன வழங்கி இதன் போது கௌரவிக்கப்பட்டன.
இதில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தோட்டத்துறை தொடர்பாக சில கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.ஆரம்ப காலத்தில் தோட்டங்கள் தான் பாடசாலைகள் வைத்தியசாலைகள்,சிறுவர் பராமறிப்பு நிலையங்கள் ஆகியனவற்றை நிர்வகித்தனர்,ஆனால் தற்போது உள்ள தோட்டங்கள் அது எதுவுமே செய்வதில்லை.கம்பனிகள் இலாபத்தினை நோக்காகக் கொண்டே தோட்டங்களை அரசாங்த்திடமிருந்து பெற்றுக்கொண்டனர்.இன்று தோட்டத்தொழிலாளர்களையும் கைவிட்டு செல்லும் அளவுக்கு வந்துள்ளனர். பல கோடிக்கணக்கான லாபத்தினை பெற்றுவிட்டு இந்த நாட்டுக்கு உரமாக இருந்து சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்திய தொழிலாளர்களை அவ்வாறு கைவிட்டு விடுவது பொருத்தமானதல்ல. ஆகவே கம்பனி காரர்கள் பாடசாலைக்ளுக்கும் சிறுவர் நிலையங்கள் வைத்தியசாலைகள் ஆகியவற்றிக்கும் ஒரு சிறியளவு தொகையாவது ஒதுக்க வேண்டும்.அத்தோடு இந்த துறைக்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள?; தனது அப்பாவின் வெளிச்சத்தில் பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சராகி என்ன செய்திருக்கிறார். அவரது அப்பா என்றால் மகாவெலி திட்டத்தினையாவது செய்திருக்கிறார.; இவர் என்ன செய்திருக்கிறார் என்று நினைத்து பார்த்தால் கவலையாக இருக்கிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன்,ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன,மாகாண கல்விப்பணிப்பாளர் ஈ.பி,டி,கே.ஏக்கநாயக்க அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான வைத்தியர் கே.ஆர் கிசான் உட்பட அதிபர்கள்,ஆசிரியர்கள்,உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.