சஜீத் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சம்மாந்துறையில் (20) நேற்று இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் அழைப்பின் பெயரில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தலைமையில் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத்
பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
இந்த தேர்தலில் முஸ்லிங்களின் வாக்குகளை எவ்வாறு சிதறடிக்கலாம் என்பது பற்றி திட்டமிட்ட சதி நடந்து கொண்டிருக்கிறது. மிகக் கவனமாக நாம் சிந்திக்க வேண்டும் இந்த தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் உள்ளனர் இவர்கள் இருவரும் பெருமான்மையின
பெளத்தர்கள் ஆனால் கோட்டாவுக்கு வாக்களிப்பது மாத்திரம் தான் பெளத்தர்கள் எனவே பெரும்பான்மை சமூகம் வாக்களிக்கின்ற ஒரு அணியோடு நாங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தை பார்த்து அச்சுறுத்துகின்றனர்.
கடந்த 52 நாள் அரசியல் மாற்றத்தில் நாங்கள் பல சவால்களை அனுபவித்தோம் ஆனால் எதற்க்கும் நாங்கள் அசையவில்லை ஏனென்றால் நாங்கள் இந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பை மதிக்க வேண்டியவர்கள் இந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பு தான் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு கவசமாக இருக்கின்ற காரணத்தால் இந்த அரசியலமைப்பை மீறி நாங்கள் செயற்ப்பட்டால் நாளை இந்த சமூகத்தை வரலாற்று துரோகிகளாக காட்டுவார்கள் என்பதற்காக எங்களுக்கு இருக்கின்ற உரிமைகள் மற்றும் எனைய விடயங்கள் எல்லாவற்றிலும் இந்த அரசியலமைப்பிலே கை வைப்பதற்கு நாங்கள் அதற்கு ஆதரவு கொடுத்தால் எதிர்காலத்தில் சிறுபான்மை இனம் எதுவும் பேச முடியாத நிலை வந்து விடும் என்பதற்காக நாங்கள் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம்.
ஏனைய தேர்தல்களை போல் அல்ல இத்தேர்தல் இந்த நாட்டில் எமது வாக்குகள் சிதறடிக்கப்பட்டால் இந்த சமுதாயம் சீரழிந்த அடிமைச்சமுதாயமாக மாறும்.
இது பழி தீர்க்கும் காலமல்ல கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால்
நமது சமுகத்தின் பாதுகாப்பு ,உரிமைகள் போன்ற ஏனைய விடயங்களை சரியான முறையில் காக்கின்ற ஒரு நல்ல ஜனாதிபதியை நாம் உருவாக்கி விட வேண்டும்.
ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் பின் என்மீதும் என் சமுகத்தின் மீதும் இனவாதிகள் பல அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி என்னையும் அந்த பயங்கரவாதிகளாக ஆக்க முட்ப்பட்டனர் அனைத்தும் போலியானவை நிரூபிக்கப்பட்டது.
இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது எப்போது பேசிய காணொளியை வைத்து சிலர் அநாகரிகமான வேலைய செய்க்கின்றனர் இதனை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது அமைச்சருக்கு எவ்வித பிரச்சினை வருவதற்கும் நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதை அவர்களுக்குச் சொல்கிறோம் இது சமூகத்தை பாதுகாக்கும் பயணமாகும் .
இந்த தேர்தல் முக்கியத்துவம் மிக்க தேர்த்தலாகும் நியாயத்திற்கும் அநியாயத்திற்க்குமான போராட்டமாகும். நாங்கள் மரணித்தாலும் பரவாயில்லை ஆனால் பல வருடம் இந்த சமுதாயம் இந்த நாட்டில் அச்சமில்லாமல் பாதுகாப்போடு வாழ்ந்தது எதிர்காலத்திலும் அவ்வாறு வாழ்வதற்கான அரசியல் தலைமையை கொண்டு வர இந்த பயணத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் எனவே இந்த பயணத்தில் எல்லோரும் இணைந்து கொள்ளுங்கள் என்றார்.
இந்த பிரச்சார கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டர்.