கார் - மோட்டார் சைக்கிள் விபத்து: கை,கால் உடைந்த நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.

எச்.எம்.எம்.பர்ஸான்-

கா
ர் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் கை, கால்களின் எழும்புகள் உடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி நாவலடி எனும் இடத்தில் வைத்து இவ்விபத்து இன்று (9) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கறைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவர் மீது மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞனுக்கு உடலில் கை, கால்கள் உட்பட பல பகுதிகளிலும் எழும்புகள் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் தொழிநுட்பக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மஜ்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -