நவராத்திரி விழாவையொட்டி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த விஜயதசமி புஜையும் , பொங்கல் , ஏடு தொடங்குதல் போன்ற நிகழ்வுகள் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா மற்றும்பிரதி அதிபர்களின் வழிகாட்டலில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
புஜைகளை எருவில் புளியடிப்பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ வடிவேல் சர்மா நிகழ்த்தி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.